விஜய்-அஜித் ரசிகர்களின் பாசப்பிணைப்பு: என்ன செய்தார்கள் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டாலும் ஒரு சில விஷயங்களில் கைகோர்த்து இருப்பது ஆக்கபூர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் அன்னதானம் செய்திருப்பது ரசிகர்களின் பாசப்பிணைப்பின் எடுத்துக்காட்டாக உள்ளது.
கோவையில் விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக அன்னதானம் முறையில் உணவு வழங்கி வருகின்றனர். அந்த விதத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் அவ்வப்போது இதில் பங்கேற்பதுண்டு. குறிப்பாக அஜித்தின் பிறந்தநாள், அஜித் படம் ரிலீசாகும் நாள் போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதை வாடிக்கையாக அஜித் ரசிகர்கள் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் விஜய்யின் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அஜித் ரசிகர்களின் ஒருவரான பிரித்தன் என்பவர் கூறியபோது எங்களுக்குள் எந்த விதமான மாறுபாடுகளும் இல்லை என்றும், நாங்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகிறோம் என்றும் விஜய் ரசிகர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments