8 ஆண்டுகளுக்கு முன்பே காருக்கு வரி கட்டிவிட்டாரா விஜய்? வைரலாகும் ரசீது!  

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

தளபதி விஜய் வரி பிரச்சனை குறித்து இன்று நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பும், அவருக்கு நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் தளபதி விஜய் வரி கட்டுதல் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வந்தது. அந்த ஹேஷ்டேக்குகளில் விஜய் தனது ஆடம்பர காருக்கு வரி கட்டவில்லை என்றும் வரி கட்டாமலேயே வரிக்கு விலக்கு கேட்பது போன்ற செய்திகள் பரவி வந்தது.

உண்மையில் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்யும்போது முழு வரியையும் கட்டி விட்டார். அதன் பின்னர் அவர், தான் கட்டிய வரியிலிருந்து வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுதான் தற்போது தீர்ப்பாகி உள்ளது என்பதும் அதில் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விஜய் ஏற்கனவே அந்த காருக்கு வரி கட்டி விட்டார் என விஜய் ரசிகர்கள் ரசீதுடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி விஜய்யின் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.