விஜய், அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்தவர் மற்றும் பழம்பெரும் நடிகர் மோகன் நடராஜன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன் நதியா நடித்த 'பூக்களை பறிக்காதீர்கள்' என்ற திரைப்படம் மூலம், மோகன் நடராஜன் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பின்னர் விஜய் நடித்த ’கண்ணுக்குள் நிலவு’ அஜித் நடித்த ’ஆழ்வார்’ விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ சூர்யா நடித்த ’வேல்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.

மேலும் நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப் பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மோகன் நடராஜன் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமான செய்தி அறிந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூகவலைதளங்களில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவிற்கு இரங்கல் பதிவு செய்து வருகின்றனர்.

More News

சென்னையில் ஓர் திருச்செந்தூர் கோவில் : பக்தர்கள் சொல்லும் அனுபவங்கள்.!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனல், சென்னையின் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தும் திரையிட முடியாத நிலை.. 'கோட்' ரசிகர்கள் ஏமாற்றம்..!

'கோட்' படத்திற்கு 9 மணி காட்சி திரையிட அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகள் சிறப்பு காட்சியை ரத்து செய்து விட்டதாக கூறப்படுவது

பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகையும் அவருடைய கணவரும் போதை பார்ட்டி நடத்தியதாக கூறிய நிலையில்

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 'சின்ன மருமகள்' சீரியல் நடிகை? பெரும் எதிர்பார்ப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வரும் நடிகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய நயன்தாரா.. இன்ஸ்டா ஸ்டோரியில் ஹிண்ட்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.