விஜய், அஜித் சூர்யாவுக்கு-3, தனுஷூக்கு -2
Wednesday, October 26, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்துள்ள 'கொடி' மற்றும் கார்த்தி நடித்துள்ள 'காஷ்மோரா' ஆகிய படங்கள் வரும் தீபாவளி தினத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் கோலிவுட் நாயகர்கள் தீபாவளி தினத்தில் வெளியிட்ட படங்களின் வெற்றி தோல்வி குறித்து பார்ப்போம்
இளையதளபதி விஜய் நடித்த 4 நான்கு படங்கள் இதுவரை தீபாவளி தினத்தில் வெளிவந்துள்ளன. அழகிய தமிழ் மகன் (2007), 'வேலாயுதம் (2011), 'துப்பாக்கி (2012) மற்றும் கத்தி (2014). இந்த நான்கு படங்களில் அழகிய தமிழ் மகன் தவிர மற்ற மூன்று படங்களும் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தல அஜித் நடித்த 'வரலாறு" (2006), 'ஏகன்' (2008), ஆரம்பம் (2013), மற்றும் வேதாளம் (2015' ஆகிய நான்கு படங்கள் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் 'ஏகன்' தவிர மற்ற மூன்று படங்களும் வெற்றி படங்கள்.
இதேபோல் தீபாவளி தினத்தில் வெளியான சூர்யாவின் 'வேல்'(2007), ஆதவன் (2009) மற்றும் 7ஆம் அறிவு (2011) ஆகிய மூன்று படங்களுமே வசூலை அள்ளிய படங்கள்
தனுஷ் நடிப்பில் 2007 தீபாவளி தினத்தில் வெளியான 'பொல்லாதவன்' சூப்பர் ஹிட்டும், '2010 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான 'உத்தமபுத்திரன்' ஹிட்டும் ஆகிய நிலையில் இந்த வருடம் கொடி' வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை தனுஷ் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கார்த்தி நடித்த 'அழகுராஜா' திரைப்படம் 2013ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் இந்த வருடம் வெளியாகவுள்ள 'காஷ்மோரா' மூலம் அவர் தனது முதல் தீபாவளி வெற்றியை ருசிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment
-
Contact at support@indiaglitz.com