அம்பானியுடன் ஒப்பந்தம் செய்தாரா தளபதி விஜய்? என்ன ஒப்பந்தம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தளபதி விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்பதும் அவர் ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக 100 கோடிக்கும் அதிகமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி தளபதி விஜய் ஒரு சில சொந்தத் தொழிலும் செய்து வருகிறார் என்பதும் அதில் ஒன்று விஜய்க்கு சொந்தமான சில திருமண மண்டபங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் தனது திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக வாடகைக்கு விட இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் இருந்து திருமண மண்டபங்களை வாடகைக்கு பெற்று ரிலையன்ஸ் நிறுவனம் சூப்பர் மார்க்கெட் நடத்த உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாலிகிராமத்தில் ஷோபா திருமண மண்டபம், போரூரில் சங்கீதா திருமண மண்டபம் உள்ளிட்ட ஒரு சில திருமண மண்டபங்கள் விஜய்க்கு சொந்தமாக இருக்கும் நிலையில் இந்த திருமண மண்டபங்கள் விரைவில் சூப்பர் மார்க்கெட்டாக மாறும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ’வாரிசு’ என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments