நீ வா நண்பா, நாம் சேர்ந்து பயணிப்போம்.. விஷால் இயக்கத்தில் விஜய் படம்..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசரை தளபதி விஜய் வெளியிட உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் குழுவினர் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தளபதி விஜய்யை சந்தித்த விஷால், ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசரை காண்பித்தார். இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த விஜய், படக்குழுவினர்களை பாராட்டி ’நண்பனுக்காக இதை கூட செய்ய மாட்டானா’ என்று கூறியது படக்குழுவினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் ’மார்க் ஆண்டனி’ படக்குழுவினர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதை அடுத்து விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியதற்கான ரசீதையின் காண்பித்து பாராட்டு பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி வருவதாகவும், இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் உங்களுக்கும் இரண்டு கதைகளை தயார் செய்துள்ளதாகவும் விஷால் கூறினார். இதைக்கேட்ட விஜய் ’நீ வா நண்பா, நான் இருக்கிறேன், சேர்த்து பயணிப்போம் என்று கூறியதை அடுத்து விஷால் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த சந்திப்பின்போது ’மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் வினோத்குமார் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

More News

மீண்டும் ஹீரோவான நடிகர் சதீஷ்.. டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க

நேபாளம் ஹோட்டலில் செஃப் ஆக மாறிய அஜித்.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் நேபாள நாட்டில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

விஷால் படத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்.. இன்று செம விருந்து..!

விஷால் நடிக்கும் படத்தை புரமோஷன் செய்ய விஜய் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணி போட்டு உக்காருடின்னு சில்க் ஸ்மிதாவை திட்டுவேன் - சுலக்சனா

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, சூரிலாம் அனாதையா சினிமாவுக்கு வந்தவங்க.. - இளவரசு

தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இளவரசு என்பதும் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்