அரசியலில் களமிறங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய் தேர்வு செய்த பிரமாண்ட இயக்குனர்..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 69’ படத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் விஜய் நடிக்க மாட்டார் என்றும் அவர் அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது. நேற்றைய விஜய் மக்கள் இயக்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூட இந்த கருத்தை தான் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியலில் களமிறங்குவதற்கு முன் ஒரு அரசியல் படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், விஜய்யை சந்தித்து ஒரு அரசியல் கதையை கூறியதாகவும் அந்த கதை பிடித்து விட்டதை அடுத்து ’தளபதி 70’ படமாக அந்த படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’நண்பன்’ என்ற திரைப்படத்தில் ஷங்கர் மற்றும் விஜய் இணைந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களின் பணிகளில் இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களும் முடித்த பின்னர் அவர் ’தளபதி 70’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இன்னும் ஒரு சில வாரங்களில் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் இந்த படத்தை முடித்தவுடன் ஷங்கர் படத்துக்கு தயாராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் களம் இறங்குவதற்கு முன்னர் ஒரு மாஸ் அரசியல் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More News

'16 வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் மறைவு.. பாரதிராஜா இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்த '16 வயதினிலே' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்ஏ ராஜ்கண்ணு காலமானார். அவரது

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்..!

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

வெள்ளக்காடான வட இந்தியா? கவிதை வடித்து வருத்தம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.