விஜய்-அட்லி படத்தின் இசையமைப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Monday,September 12 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'பைரவா' படத்தை அடுத்து அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், முதல்கட்டமாக இந்த படத்தின் இசையமைப்பாளரை அட்லி தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விஜய்-அட்லி இணைந்த 'தெறி' படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. கிட்டத்தட்ட 'தெறி' கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறவுள்ளதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'தொடரி' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்டது.

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறவுள்ளது.

தனுஷின் ஹாலிவுட் பட படப்பிடிப்பு எப்போது?

கோலிவுட்டின் பிசியான நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'தொடரி' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு எப்போது? கமல் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு கமல்ஹாசனுக்கு எதிர்பாராத விபத்து நேரிட்டது. கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல், தற்போது ஓய்வு எடுத்து வருகிற

காவிரி நீர் பிரச்சனை. நடிகர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

உலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும்- எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே “இயற்கை” தீர்மானித்தது​​ம்