'விஜய் 61' படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகி தேர்வு நடந்து வருவதாக தெரிகிறது. இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் கேரக்டர் இருப்பதாகவும் இரண்டாவது ஹீரோயின் கேரக்டருக்காக பிரபல பாலிவுட் நாயகி ஒருவரிடம் இயக்குனர் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஹீரோயின்கள் உள்பட இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரவுள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.