விஜய்யின் அடுத்த பட இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது. விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள 61வது படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்றும், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. வெகுவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

மேலும் விஜய்-சிவாஜி புரடொக்ஷன்ஸ் இணையும் இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், 'தெறி' போலவே இந்த படமும் ஒரு ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கபாலி'யால் கிடைத்த லாபம் எவ்வளவு? விரிவான தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக சூப்பர் ஹிட்...

'இருமுகன்' படத்தின் சஸ்பென்ஸ் கதை இதுதானா?

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து....

சிம்பு ரசிகர்களுக்கு இன்று 'தரை மாஸ்' கொண்டாட்டம்

சிம்பு நடிப்பில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

இதுவரை 'கபாலி' செய்த வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக 5000க்கும்...

'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...