விஜய்-சூர்யா படங்களின் முக்கிய ஒற்றுமை
- IndiaGlitz, [Monday,February 27 2017]
இந்த ஆண்டு வெளிவரும் படங்களில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ள படங்களில் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய இரு படங்களும் அடங்கும். இந்நிலையில் இந்த இரு படங்களுக்கு இடையே ஒரு முக்கிய ஒற்றுமை இருப்பது தற்போது தெரியவந்தூள்ளது.
'விஜய் 61' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய இரண்டு படங்களும் 80களின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வருவது என்பதுதான் முக்கிய ஒற்றுமை. ஆனாலும் 'விஜய் 61' படத்தில் விஜய், நித்யாமேனன் நடிக்கும் காட்சிகள் மட்டும் 80களில் நடக்கும் காட்சிகளாக இருக்கும் நிலையில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' முழுப்படமும் 80களில் நடப்பது போல் அமைந்துள்ளது என்ற வேற்றுமையும் இரு படங்கள் இடையே உள்ளது.
மேலும் சிம்புவின் 'அன்பாவனன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் ஒருசில பகுதிகளும் கடந்த 80களில் நடப்பது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர் அதிகளவில் 80கள் படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.'