close
Choose your channels

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே வில்லன்

Saturday, March 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60' திரைப்படம் வரும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கேரக்டரிலும் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது


இந்த படத்தின் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

சந்தோஷ் நாராயணன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment