close
Choose your channels

விஜய் 60- விஜய் 61 படங்கள் குறித்த தகவல்கள்

Monday, May 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' கடந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி மூன்றாவது வாரமாக சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. பரதன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது

இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த தகவல் தற்போது வெளிவரவுள்ளது. இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' படத்திற்கு பின்னர் சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை இயக்கும் இயக்குனர் உள்பட மற்ற டெக்னிஷியன்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் மீண்டும் அட்லியுடன் விஜய் இணைவதாக ஒரு செய்தி வெளிவந்தது. எனவே இந்த படத்தை அட்லி இயக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment