விஜய் 60- விஜய் 61 படங்கள் குறித்த தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,May 02 2016]
இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' கடந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி மூன்றாவது வாரமாக சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. பரதன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது

இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த தகவல் தற்போது வெளிவரவுள்ளது. இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' படத்திற்கு பின்னர் சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை இயக்கும் இயக்குனர் உள்பட மற்ற டெக்னிஷியன்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் மீண்டும் அட்லியுடன் விஜய் இணைவதாக ஒரு செய்தி வெளிவந்தது. எனவே இந்த படத்தை அட்லி இயக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

22 மணி நேரத்தில் 5 மில்லியன். 'கபாலி'யின் அதிரடி சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் டீசர் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ள...

மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணையும் ராய்லட்சுமி

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'காஞ்சனா' படத்தின் நாயகியாக நடித்த ராய்லட்சுமி, தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் ...

சிம்புவின் 'இது நம்ம ஆளு'. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு கடந்த சில மாதங்களாக தள்ளிப்போய் கொண்டே...

சென்னையில் இந்த வார 'தெறி' வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 22 முதல் 24 வரையிலான சென்னை வசூல் ரூ.1,85,32,820 என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அஜித் குறித்து பலர் அறியாத 20 விஷயங்கள்

'தல' என்று அன்புடன் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் இன்று தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார்...