'விஜய் 60' படத்திற்கு எம்.ஜி.ஆர் பட டைட்டில்?

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பே முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படவில்லை.
இயக்குனர் பரதன் தனது உதவியாளர்களுடன் இந்த படத்தின் டைட்டில் குறித்து ஆலோசனை செய்து வரும் நிலையில் இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர். பட டைட்டிலான 'எங்க வீட்டு பிள்ளை' டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு செய்தி வெளியாகி பின்னர் அது மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த அதே விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம்தான் 'விஜய் 60' படத்தையும் தயாரித்து வருவதாலும், இந்த படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாலும் இந்த டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் எந்தவித பஞ்ச் வசனமும் வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒருசில வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள இயக்குனர் பரதன், விஜய்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி மிக அபாரமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்னுடைய பிடிவாதம்தான் 'கபாலி' உருவாக காரணம் : ரஞ்சித்

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது கோடி ரூபாய் லாட்டரி சீட்டு விழுந்ததற்கு சமம். இந்த பொன்னான வாய்ப்பு பல சீனியர் இயக்குனர்களுக்கே...

விஜய்யுடன் மீண்டும் இணையும் மோகன்லால்

இளையதளபதி விஜய் நடித்த 'ஜில்லா' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்தது...

காஜல் அகர்வாலை ஒரு மாதத்தில் முந்திய நயன்தாரா

ஜீவா, காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' திரைப்படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை தினமான அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும்...

'கபாலி' புரமோஷனில் இறங்கிய மத்திய அரசு நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியாக ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே

'பாகுபலி' வசூலுக்கு சவால் விடுமா 'கபாலி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உண்மையான பிரமாண்டத்தோடு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...