முதல்நாளிலேயே இளையதளபதியுடன் இணைந்த சதீஷ்

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 60' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்யின் அறிமுகப்பாடல் படப்பிடிப்பு இன்று சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் நாள் படப்பிடிப்பிலேயே விஜய்யுடன் காமெடி நடிகர் சதீஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே விஜய்யுடன் சதீஷ் 'கத்தி' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இன்று முதல் இளையதளபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், தங்களை கடவுளும் ரசிகர்களும் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

விஷாலின் 'கத்திச்சண்டை' எப்போது முடியும் தெரியுமா?

விஷால் நடித்த 'மருது' மற்றும் 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் விஷால் அடுத்து சுராஜ் இயக்கத்தில்...

ஆகஸ்ட்டில் கமல்ஹாசனின் அடுத்த படம்

உலக நாயகன் கமல்ஹாசன், மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலில் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம்...

நயன்தாராவுக்கு இதுதான் முதல்முறை

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு கெட்டப்புகளில்...

ஜூன் 8 முதல் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கும் 'பாகுபலி'

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'பாகுபலி' திரைப்படம் ஏற்கனவே ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படம் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது....

விக்ரமுடன் கருத்துவேறுபாடா? சூர்யாவின் பதில்

சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு...