கில்லி'யின் ரேஸ் த்ரில்லருக்கு இணையாக விஜய் 60'. படக்குழுவினர் உறுதி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்த 'கில்லி' திரைப்படம், விஜய்யின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படம். சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் ரேஸ் த்ரில்லர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு ரேஸ் த்ரில்லரை மீண்டும் 'விஜய்-60' படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த விஜய்-60 படக்குழுவினர், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக விஜய்யை சந்திக்க திட்டமிட்டதாகவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் கூறினர்.

விஜய்க்கு ஜோடியாக முதன்முதலாக கீர்த்திசுரேஷ், மற்றும் 'கத்தி'க்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் சதீஷ் ஆகியோர் மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஜீவா- நயன்தாராவின் 'திருநாள்' ரிலீஸ் தேதி

கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'ஈ' படத்தில் ஜோடியாக நடித்த ஜீவா-நயன்தாரா ஜோடி மீண்டும்...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றார்...

கார் விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த சூர்யா-கார்த்தி நாயகி

பிரபல நடிகை ப்ரணிதா நேற்று படப்பிடிப்பு ஒன்றுக்காக 'கம்மம்' என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது...

சி.வி.குமாரின் முதல் படத்தில் சசிகுமார் நாயகி

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது இயக்குனராகியுள்ளார்....

கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த பாஜக எம்.பி

'தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தி உறுதியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்..