close
Choose your channels

'விஜய் 60'-அழகிய தமிழ்மகன். ஒரு அபூர்வ ஒற்றுமை

Friday, May 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் நெல்லை தமிழில் பேசி நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
புதியதாக வந்த தகவலின்படி இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கி வரும் பரதனின் முந்தைய படமான 'அழகிய தமிழ்மகன்' படத்திலும் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்செயலாக நடந்த ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, ஜான்விஜய், விஜயராகவன், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment