'விஜய் 60' டைட்டில் படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,August 13 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' என்று வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் படக்குழுவினர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
பி.வெங்கட்ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரடொக்ஷன்ஸ் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் இளையதளபதி விஜய்யின் 'தளபதி 60' படத்துக்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது.
இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். 'எங்க வீட்டு பிள்ளை' என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.