விஜய் 60 படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் கீர்த்தி சுரேஷ்

  • IndiaGlitz, [Tuesday,February 16 2016]

'தெறி' படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் உறுதிபட வந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சற்று முன்னர் விஜய் 60 படத்தின் ஒப்பந்தத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கையெழுத்திட்டுள்ளார்.


இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இளையதளபதி விஜய் சாருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் நடிக்கும் தருணங்களை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் என்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜய் 60 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கீர்த்தி சுரேஷுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.