'பாகுபலி', 'கபாலி'க்கு அடுத்த இடத்தை பிடித்தது 'விஜய் 60'

  • IndiaGlitz, [Wednesday,August 24 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை IFAR என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை விஜய் படங்களின் மிகப்பெரிய கேரள உரிமைத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எஸ்,.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியை அடுத்து கேரளாவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகிய பிறமொழி படம் இதுதான் என்பதும் பாகுபலி ரூ.10.5 கோடிக்கும் 'கபாலி' ரூ.7.5 கோடிக்கும் வியாபாரம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கையின் முழுவிபரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருதை வென்ற கமல்ஹாசனுக்கு எட்டு திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள்...

இது தந்தை-மகன் உறவு. கமலுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமின்றி உலகில் உள்ள தமிழர்கள்...

சிம்பு, சூர்யா தனுஷ் நடிகை மீது தேச துரோக வழக்கு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நல்ல நாடு என்று பேட்டி ஒன்றில் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

'அஜித் 57' படத்தின் டைட்டில் குறித்த முக்கிய தகவல்

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நாகசைதன்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுதம் மேனன்

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது ஒரு இக்கட்டான நிலை. இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும்...