'விஜய் 60' பர்ஸ்ட்லுக் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 03 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் 'பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரிலீஸ் குறித்த செய்தி நேற்று மாலை முதல் சமூக இணையதளங்களை அதிர வைத்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 'விஜய் 60' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக வெளிவந்த செய்திதான் நேற்றைய பரபரப்புக்கு காரணம்.
இந்நிலையில் 'விஜய் 60' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அனைவரும் எதிர்பார்த்தபடியே வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில்தான் வெளிவரவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையே இன்று மாலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது.
விஜய்யின் 60வது படத்தலைப்பை அறிய அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்யின் மற்ற படங்களின் டைட்டில்கள் போலவே இந்த படத்தின் டைட்டிலும் 'மாஸ்' ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல நடிகை விவாகரத்து

காவ்யா, மஞ்சு, லிசி, அமலாபால் மற்றும் திவ்யா உண்ணி என வரிசையாக மலையாள நடிகைகள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்து வரும் நிலையில்...

இளையதளபதியின் 'விஜய் 60' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய...

'தர்மதுரை' இயக்குனருக்கு சிவகுமார் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பல கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்...

சூப்பர் ஹிட் ஆன படத்தின் 2ஆம் பாகத்தில் அரவிந்தசாமி?

தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் நடித்து வருகிறார்...

அதர்வா படத்தில் நயன்தாராவுக்கு என்ன கேரக்டர்?

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நயன்தாரா சமீபகாலமாக இளம் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ஆரி...