close
Choose your channels

20 வருடங்களுக்கு பின் சிவாஜி குடும்பத்துடன் இணையும் விஜய்

Friday, February 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வரும் நிலையில் 'விஜய் 60' படத்தின் பணிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிவிட்டது. இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்யின் 61வது படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இந்த படம் 2017-ல் தொடங்க வாய்ப்புள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கனேசனுடன் விஜய் நடித்த ஒரே படமான 'ஒன்ஸ்மோர்' திரைப்படம் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. அதன் பின்னர் 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சிவாஜி குடும்பத்தில் விஜய் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.