'விஜய் 60' பட நாயகி திடீர் காயம். மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Sunday,August 28 2016]
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பாப்ரி கோஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருவது அறிந்ததே. இதில் பெங்காலி நடிகையான பாப்ரி கோஷ் அவர்கள் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் 60' படத்தில் பாப்ரிகோஷின் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில் பாப்ரிகோஷ் அவர்களுக்கு ஒருசிறு காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் பாப்ரிகோஷ், ஜூம்பா நடன பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் நல்ல வேளையாக 'விஜய் 60' படத்தில் நடித்து முடித்தவுடன் இந்த காயம் ஏற்பட்டதாகவும் இல்லையென்றால் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்க நேர்ந்திருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.