'தெறி'யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,December 01 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் உலக லோக்க தர டிக்கெட் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பாடல் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' என்று தொடங்குவதாகவும் இந்த 'தெறி' பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளதாகவும், இந்த பாடலை 'தங்கமாரி ஊதாரி' பாடல் புகழ் ரோகேஷ் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாடலுக்கு விஜய் தாறுமாறாக டான்ஸ் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதாகவும், 40 வினாடிகள் அடங்கிய இந்த பாடலின் வீடியோ ஒன்று விரைவில் இணையதளங்களில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'மாயா'வை அடுத்து மீண்டும் பேய்ப்படத்தில் நயன்தாரா?

தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா....

அஜீத்தை முந்தினார் விக்ரம்பிரபு?

கடந்த தீபாவளி தினத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது...

ஸ்ரீதேவிக்கு காதல் கடிதம் எழுதிய பிரபல இயக்குனர்

திரையுலகில் சர்ச்சை நாயகன் யார்? என்று கேட்டால் சின்னக்குழந்தை கூட உடனே இயக்குனர் ராம்கோபால் வர்மா என்று கூறிவிடும்...

உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றது உண்மையா? அனுஷ்கா பதில்

பாகுபலி, ருத்திரம்மாதேவி ஆகிய வெற்றி படங்களுக்கு பின்னர் சமீபத்தில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா...

பல்கேரிய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதிய 'தெறி' விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்ததை அடுத்து தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் ...