close
Choose your channels

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

Thursday, October 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்கு தற்போது டைட்டிலை இறுதி செய்யும் பணியில் அட்லியும் அவருடைய உதவியாளர்களும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஏற்கனவே 'மூன்று முகம்' உள்பட பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போது இந்த படத்திற்கு 'காக்கி' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு போலீஸ் ஸ்டோரி என்பதால் இந்த டைட்டில் இப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் இரண்டு பாடல்களை பாடவிருக்கின்றார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment