'விஜய் 59' டைட்டில் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 24 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளதாக இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 'வெற்றி', 'காக்கி', 'துப்பாக்கி 2', 'தாறுமாறு' போன்ற டைட்டில்களில் ஒன்று இந்த படத்திற்கு வைக்கப்படலாம் என்ற நிலையில் இன்று காலை 'விஜயகுமார் ஐ.பி.எஸ்' என்ற டைட்டில் என்றும் தகவல் வந்தது.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்கு 'தெறி' என்ற டைட்டில் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டைட்டிலை வைத்துதான் போஸ்டர் டிசைன் செய்ய கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமான டைட்டில் எதுவென்று நாளை நள்ளிரவுதான் உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கத்தி'க்கு பதில் கவுண்டமணிக்கு தாவுகிறாரா சிரஞ்சீவி?

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான கவுண்டமணியின் ரீஎண்ட்ரி படமான '49ஓ' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக...

'செல்பி புள்ளே' பாடகிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தில் 'செல்பி புள்ளே' என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பாடகி சுனிதி செளகான்...

விக்ரம்-ஆனந்த் சங்கர் படத்தின் இசையமைப்பாளர்

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த '10 எண்றதுகுள்ள' திரைப்படம் சுமாரான வசூலை தந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள...

கமல் டைப்பில் நாட்டை விட்டு வெளியேற யோசிக்கும் பிரபல நடிகர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 'விஸ்வரூபம்' படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது உலக நாயகன் கமல்ஹாசன், 'நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்தார்...

பாரீஸில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படப்பிடிப்பு ஆரம்பம்

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் வெற்றி பெற்று வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்'...