'காக்கி'க்காக பேச்சுவார்த்தை நடத்தும் 'விஜய் 59' குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்திற்கு தலைப்பு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றும் 'காக்கி' என்பதுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
'காக்கி' என்ற டைட்டிலை ஏற்கனவே 'வாய்மை' இயக்குனர் செந்திகுமார் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அவருடன் விஜய் 59' குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
போக்கிரி, ஜில்லா படங்களுக்கு பின்னர் விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் தீபாவளி தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதால் அதற்குள் டைட்டிலை இறுதி செய்யும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout