விஜய் 59' படம் குறித்த புதிய தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 17 2015]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் சென்னை படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளனர். கோவாவில் விஜய் மற்றும் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் உரையாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் எமிஜாக்சனின் காட்சிகள் அனைத்தும் பிளாஷ்பேக்கில் வருவதாக தகவல்கல் வெளிவந்துள்ளது. எமிஜாக்சன் இந்த படத்தில் மலையாளி பெண்ணாக வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பை சீனாவில் நடத்த அட்லி முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான தட்பவெப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இந்த படத்தில் சமந்தாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் ஆகியோர் இந்த படத்தின் வில்லன்களாக நடிக்கின்றனர்.

More News

நயன்தாராவின் திருநாளில் இணையும் கோபிநாத்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத், திரையுலகிற்கு புதியவர் இல்லை...

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும் ...

முதலமைச்சர்-நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நடிகர்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சந்தித்து வெள்ள நிவாரண நிதியளிக்க உள்ளதாக காலையில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ..

'விஜய் 59' படத்தின் புதிய டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜின் திடீர் சந்திப்பு ஏன்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...