'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அனிருத் இசையில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே சக்கை போடு போட்டு வரும் நிலையில் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் மட்டும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூ டியூபில் 67 மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் கால்பந்து அணியில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தவர்களில் ஒருவரான வினயா சேஷன், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நடன போட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ’குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி உள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள இதில் பகிர்ந்து, ’உங்களுக்கு இந்த வீடியோ பிடிக்கும்’ என்று நினைக்கிறேன். குட்டி ஸ்டோரி பாடலுக்காக நான் நடனம் ஆடிய ஒரு சில காட்சிகள் இதோ’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் பார்த்து பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
??️ When you groove to a Thalapathy @actorvijay song, you feel some verelevel swagger ??️
— Vinaya Seshan (@VinayaSeshanOff) August 3, 2020
Here's a glimplse of #Kuttistory from #showdown_uk ;) had a great deal of fun performing after ages ☺️ Hope you all like it ❤️ pic.twitter.com/l0pZ9B59V4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments