close
Choose your channels

பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்!

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பா ரஞ்சித் அடுத்ததாக சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசை ஞானி இளையராஜா இசை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பா ரஞ்சித் படங்களுக்கு இதுவரை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக பா ரஞ்சித் இணைய உள்ளார். இதனையடுத்து பா ரஞ்சித், விக்ரம் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய மூன்று பிரபலங்கள் இணையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment