பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பா ரஞ்சித் அடுத்ததாக சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசை ஞானி இளையராஜா இசை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பா ரஞ்சித் படங்களுக்கு இதுவரை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக பா ரஞ்சித் இணைய உள்ளார். இதனையடுத்து பா ரஞ்சித், விக்ரம் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய மூன்று பிரபலங்கள் இணையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் சூப்பர் அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.

ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை வரும் அபினய்: கமல் கூறியதன் அர்த்தம் இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பதும் இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஒருவர்

'மாநாடு' படம் குறித்து செம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

மாலத்தீவு, மரவீடு, நீச்சலுடையில் நடனமாடும் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே மாலத்தீவு சென்றுள்ளதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

ரஜினிகாந்த் வாழ்த்துவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை: குக் வித் கோமாளி பிரபலம் நெகிழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது