இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியதற்கு விஷாலின் கருத்து

  • IndiaGlitz, [Monday,August 29 2016]

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் திருட்டு டிவிடி கும்பல் மற்றும் இணையதளங்களில் சட்டவிரோதமாக புதிய படங்களை வெளியிடுபவர்கள் பெரும்பாலும் இலங்கை தமிழர்களாக உள்ளதாக பேசினார்.
சேரனின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு இலங்கை தமிழர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள் மீது குற்றம் சுமத்துவதை தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது அமைதியாக வாழட்டும்" என்று கூறியுள்ளார்.
இலங்கை தமிழர்களை தான் ஒட்டுமொத்தமாக கூறவில்லை என்றும் தவறு செய்யும் ஒருசிலர்களை மட்டுமே தான் விமர்சனம் செய்ததாக சேரன் தனது பேச்சுக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தால் அப்புக்குட்டிக்கு கிடைத்த அமெரிக்க வாய்ப்பு

சுசீந்திரன் இயக்கிய 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, அஜித் நடித்த 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

'விஜய் 60' பட நாயகி திடீர் காயம். மருத்துவமனையில் அனுமதி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பாப்ரி கோஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருவது அறிந்ததே

வைரமுத்துக்கு கிடைத்த 2வது சர்வதேச அங்கீகாரம்

தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்ற கவியரசு வைரமுத்து எழுதிய 'வெள்ளை பூக்கள் என்ற தமிழ் பாடல் ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரஹ்மானால் பாடப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது

'ரெமோ' இசையில் மேலும் ஒரு புதுமை. அனிருத் இசையில் பாடிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் ஜெயம்ரவி

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியினை சற்று முன்னர் பார்த்தோம்...