நயன்தாரா காதலரின் திடீர் மாற்றம் ஏன்?
- IndiaGlitz, [Wednesday,February 15 2017]
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது தோன்றிய இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது பெயரில் திடீரென சிறிய மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. Vignesh Sivan என்று இருந்த அவரது பெயர் தற்போது Vignesh Shivn என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை உறுதி செய்யும் வகையில் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் புதிய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நியூமிராலஜிக்காக இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.