நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடல்: வீடியோ வைரல்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்காக அவரது காதலர் விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’நான் பிழை’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடலின் வரிகளை பார்க்கும்போது நயன்தாராவுக்காகவே உருகி உருகி எழுதியது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

அனிருத் இசையில், ரவி மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் முதல் சிரிபால சில வரிகளை தற்போது பார்ப்போம்.

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் தவறே இல்லை

நீ இலை, நான் பருவ மழை
சிறுசிறு துளியாய் விழும் தருணம் இல்லை

ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே