நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் கூறிய நெகிழ்ச்சியான வாழ்த்து

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவருடைய முதல் படம் மனசிநக்கரே (Manassinakkare) என்ற மலையாள படம் ஆகும். இந்த படம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியானது. எனவே நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி நேற்றுடன் 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்த கொண்டாட்டத்தை #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ்சிவன், இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டரில் பதிவு செய்து நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுக்கு மேலும் பல சக்திகளும், வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துவதாகவும், இந்த வெற்றி நயன்தாராவுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள் என்றும், இன்றைய நாள் கடவுளின் அருள் கிடைத்த அன்பான நாள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

மேலும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

More News

கமல், ரஜினி யார் கட்சிக்கு ஆதரவு: சந்தானம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே வரும் ஜனவரியில் தங்கள் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும்

சிவகார்த்திகேயன் படத்துடன் போட்டியா? சந்தானம் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' மற்றும் சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் 'பலூன் இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட

விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

சக்கை போடு போட்டதா சந்தானம் படத்தின் வசூல்?

'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் காரணமாக திருப்திகரமான வசூலையே பெற்றுள்ளது.