விக்னேஷ் சிவன் கூறிய பிறந்த நாள் வாழ்த்து: யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவின் பிறந்த நாளுக்கு தவறாமல் தனது டுவிட்டரில் வாழ்த்து கூறவும் விக்னேஷ்சிவன் தவறியதில்லை.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், தனது தாயாரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த புகைப்படத்தில் சந்தோஷமாக இருப்பது போன்று எனது தாயார் தினமும் மகிழ்ச்சியுடன் நல்ல உடல்நலத்துடனும் இருக்க கடவுள் அருள்புரிய வேண்டும் என்று தான் வேண்டிக்கொள்வதாக குரிப்பிட்டுள்ளார்.
மேலும் விக்னேஷ்சிவன் தனது டுவிட்டில் தாயை மிகவும் நேசிப்பதாகவும், இந்த உலகில் அவரே சிறந்தவர் என்றும், அவர் கடவுளுக்கு இணையானவர் என்பது போன்ற ஹெஷ்டேக்குகளை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout