நயன்தாரா படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ்சிவன்!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’நெற்றிக்கண்’. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’அவள்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் ’நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் ’நெற்றிக்கண்’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்/

’இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த பாடல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் சித்ஸ்ரீராம் அவர்களால் பாடப்பட்டது என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த பாடல் வெளியாகும் தேதியை நயன்தாராவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.3 கோடி முதல் ரூ.30 லட்சம் வரை: நடிகை சாந்தினி கும்பல் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம்!

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்றும், அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் அவரது கும்பல் தன்னிடம் ரூபாய் 3 கோடி வரை கேட்டு மிரட்டியதாகவும்

கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு குடும்பத்தில் 6 பேரை காவு வாங்கிய கொரோனா...! மனதை உருக்கும் சோக நிகழ்வு.....!

திருப்பூரில் தன் நான்கு மகன்கள் இறந்ததை கேட்டு, அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க… போர்ட் வைத்து மனிதநேயத்தை காட்டிய அதிசய மனிதர்!

கொரோனா பீதிக்கு இடையில் ஒரு மனிதர் “பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க…

மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒருவாரம் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின்