அடிச்சி தூக்கியிருக்காங்க: நயன்தாராவை பாராட்டிய விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Saturday,January 12 2019]

தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை அஜித் ரசிகர்களும் திரையுலக பிரமுகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், 'விஸ்வாசம்' படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இயக்குனர் சிவா குழுவினர்களுக்கும் நயன்தாராவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஜித் இந்த படத்தில் இறங்கி அடிச்சி தூக்கியுள்ளார் என்றும், இந்த படத்தால் படம் பார்த்த நமக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்துள்ளதாகவும், இயக்குனர் சிவாவின் எமோஷனல் கதை மற்றும் காட்சிகள் மிக அருமை என்றும், அவருக்கு உறுதுணையாக இருந்த டி.இமான் மற்றும் வெற்றி ஆகியோர்களுக்கு தனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாராவுக்கு மற்றொரு குறிப்பிட்டு சொல்லும்படியான கேரக்டர் என்றும், அவரும் அந்த கேரக்டரில் மிக அருமையாக நடித்துள்ளார் என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.