close
Choose your channels

உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் தங்கமே... நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்..!

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தின் நாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டருக்கு ’உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்’ என நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகி ஆக நடித்துள்ளார்

இந்த நிலையில் சற்றுமுன் நயன்தாராவின் ‘ஜவான்’ போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டு ‘அதில் புயலுக்கு முன் வரும் இடி இவர்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த விக்னேஷ் சிவன், ‘ஷாருக்கான் ரசிகராக இருந்து அவரது திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று இருந்த நயன்தாரா, தற்போது அவருக்கு ஜோடியாகவே ஒரு பெரிய படத்தில் நடித்துள்ளார். உங்கள் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது. உங்களை பார்க்க எனக்கு பெருமையாக இருக்கிறது. நீங்கள் மிகவும் ஊக்கம் அளிக்கிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment