இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்: தோனி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி அவர்கள் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தவுடன் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவர் குறித்த பதிவுகள் டிரெண்டானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தல தோனி ஓய்வு குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் கவிதை வடிவில் ஒரு டுவிட்டை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
டியர் மகேந்திர சிங் அவர்களே
நீங்கள் தான் எப்பொழுதுமே எங்களுடைய கிங்
டியர் நம்பர் 7
நீங்கள்தான் 11 பேர் கொண்ட அணிக்கு கூல் கேப்டன்
டியர் கேப்டன் கூல்
நீங்கள்தான் அமைதி பள்ளியின் பிரின்ஸ்பல்
டியர் எம்.எஸ்
உங்களை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம்
டியர் மஹி பாய்
நீங்கள் நீலத்தில் இருந்து விடை பெற்றிருக்கலாம், என்றும் மஞ்சளில் எங்களுடனே இருப்பீர்கள்
டியர் தோனி
இனிமேல் தான் உங்களது அடுத்த கட்ட பயணம் ஆரம்பம்
இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது கவிதை வடிவ டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
@msdhoni #Dhoni #MSDhoni #ThankYouMSDhoni pic.twitter.com/K2GDeI5nkJ
— Vignesh Shivan (@VigneshShivN) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments