'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு: நயன் குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்

காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கடவுளின் அருளால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து விட்டது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு காதலர் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரசு விழாவாக மாறும் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்! தமிழக முதல்வர் அறிவிப்பு!

புகழ் பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிறந்த முருகப் பக்தராகவும் அறியப்பட்ட கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

நான் அப்பவே சொன்னேன்… இந்திய ரசிகர்களை சீண்டி இங்கிலாந்து வீரர் போட்ட அதிரடி டிவிட்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னதாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர்.

சசிகலா ராஜமாதாவா? கிழித்தெடுத்த ஜெயலலிதாவின் தோழி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனது குறித்தும், பெங்களூரிலிருந்து சென்னை வந்தது குறித்துமான செய்திகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டு

பள்ளி நண்பர்களுடன் இணையும் இயக்குனர் வசந்தபாலன்: புதிய பட அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வசந்தபாலன் 'ஆல்பம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய 'வெயில்' என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது

மியான்மரில் இராணுவ ஆதிக்கம்.. பெண்ணின் தலையில் பாய்ந்த குண்டு!

மியான்மரில் தற்போது இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் ஆங் சாங் சூகி உட்பட அந்நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.