தளபதி 63 பிசியிலும் விக்னேஷ் சிவனுக்காக நேரம் ஒதுக்கிய அட்லி

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பில் இயக்குனர் அட்லி இருப்பது அனைவரும் அறிந்ததே. 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு இயக்குனர் அட்லி தயாராகி வருகிறார்

இந்த நிலையில் 'நானி நடித்த 'ஜெர்சி' என்ற படத்திற்காக அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ஒரு பாடல் சமீபத்தில் வெளிவந்தது. 'மறக்கவில்லையே' என்று தொடங்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் இந்த பாடலை கேட்ட இயக்குனர் அட்லி, அனிருத்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன், 'தளபதி 63' பிசியிலும் எங்கள் பாட்டை கேட்க நேரம் ஒதுக்கிய அட்லிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.