ஸ்டாலின், கனிமொழிக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை முதலில் திரையுலகினர் உள்பட யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இதுகுறித்து தொடர்ச்சியாக பதிவு செய்த டுவிட்டுக்களால்தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பின்னரே பலரும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு பெண்ணை விமர்சனம் செய்த ராதாரவி மீது பெண்ணுரிமை பற்றி பேசி வரும் திமுக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கனிமொழி எம்பி அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களில் திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ஸ்டாலின், கனிமொழி இருவரும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஸ்டாலின், கனிமொழி ஆகிய இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
 

More News

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்

அமமுக வேட்பாளரான சிம்பு படத்தயாரிப்பாளர்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.