ஹனிமூனில் இருந்து திரும்பியதும் உதயநிதிக்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: இதுதான் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்தார் என்பதும் சமீபத்தில் அவர் ஹனிமூனை முடித்துவிட்டு திரும்பினார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இருந்து ஹனிமூனில் இருந்து திரும்பிய உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித், உதயநிதிக்கு நினைவுப்பரிசு வழங்கினார். இதுகுறித்த புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘உங்களுடைய பெரும் ஒத்துழைப்பால் தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அது மட்டுமின்றி அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை ரிலீஸ் செய்து வரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
????????????❤️❤️ thank you for the grand release and support sir ❤️???????????????????? and congrats for all the back to back blockbusters ????❤️❤️???????? hearty wishes to continue the winning streak ❤️?????? https://t.co/EVDZUjxDVG
— Vignesh Shivan (@VigneshShivN) June 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com