இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி விக்னேஷ் சிவனுக்கு முத்தம் தரும் நயன்.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 02 2023]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியவாறு விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதனை அடுத்து இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தை அடுத்து தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் நயன்தாரா புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த பதிவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன், ’2022 ஆம் ஆண்டில் என் வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதியாக நயன்தாராவை நான் திருமணம் செய்து கொண்டதை பார்க்கிறேன் என்று கூறிய விக்னேஷ் சிவன், இந்த ஆண்டு லெஜெண்ட் மற்றும் சூப்பர் ஸ்டாரின் ஆசீர்வாதங்களை பெற முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தினமும் பார்த்து ஆனந்த கண்ணீர் விட எனக்கு இரண்டு மகன்களை கொடுத்த கடவுளுக்கு தனது நன்றி என்றும் ஒவ்வொரு முறையும் நான் அவர்களை முத்தமிடுவதற்கு முன்பே என் கண்ணில் கண்ணீர் வந்துவிடுகிறது என்றும் மிகவும் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து எனக்கு மிகவும் பிடித்து எழுதிய, என் இதயத்திற்கு நெருக்கமான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இந்த ஆண்டு தான் வெளியானது என்றும் அருமையான நட்சத்திரங்கள் மற்றும் எனது நெருங்கிய நண்பர் அனிருத்துடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை குறிப்பிட்ட விக்னேஷ் சிவன் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி என்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் பணிபுரிந்தது மிகவும் பெருமையாக இருந்தது என்றும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆஸ்கார் நாயகனை ஏஆர் ரகுமான், உலகநாயகன் கமல்ஹாசன், மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் இரவு உணவு அருந்தியது என் வாழ்க்கையின் மிகச் சிறந்த அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2002ஆம் ஆண்டில் தங்களுடைய தயாரிப்பில் நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்று தந்த ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருப்பதும் லைகா நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிய இருப்பது மிகவும் சந்தோஷத்தை தருகிறது என்றும் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய விஷயம் என்றும் 2023 ஆம் ஆண்டு பிரமாண்டமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

தோளுக்கு மேல் வளர்ந்த தோழனுடன் சமுத்திரக்கனி.. எப்போது ஹீரோ ஆவார்?

தமிழ் திரை உலகின் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் தோளுக்கு மேல் வளர்ந்த மகனுக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் பதிவு செய்த கமெண்ட்ஸ்

ப்ரியா அட்லியின் வளைகாப்பு, 'வாரிசு' இசை வெளியீடு.. விஜய் மனைவி கலந்து கொள்ளாதது ஏன்?

 சமீபத்தில் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் அட்லியின் மனைவி ப்ரியா அட்லியின் வளைகாப்பு விழா ஆகியவற்றுக்கு விஜய் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்

கமல்ஹாசன் - எஸ்.எஸ்.ராஜமெளலி திடீர் சந்திப்பு.. பிரமாண்டமா திட்டமா?

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்ததாகவும் இருவரும் இணைந்து

என் குடும்பத்தில இருந்து யாருமே வரல்ல.. வருத்தத்துடன் கூறிய ஷிவினுக்கு கமல் கூறிய ஆறுதல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்களில் உறவினர்கள் வருகை தந்தார்கள் என்பதும் உறவினர்களை பார்த்ததும் போட்டியாளர்கள்

2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பு: ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடும் புதிய படம்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்,