திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நயன்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.
மேலும் நேற்று முதல் முதலாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை காண்பிக்கும் வகையில் நயன்தாராவின் புகைப்படம் வெளியான நிலையில் அதை ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் திருமண நாளை முன்னிட்டு விக்னேஷ் தந்த சர்ப்ரைஸ் காரணமாக நயன்தாரா இன்ப அதிர்ச்சி அடைந்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமண நாளை கொண்டாட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்திருந்த நிலையில் திடீரென புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே ஒருவர் வந்தார். இந்த புல்லாங்குழல் இசையை கேட்டு அசந்து போன நயன்தாரா, அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷ் சிவனை கட்டிப் பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார்.
புல்லாங்குழல் வாசித்த தனது நண்பர் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்களின் எளிமையான அதே சமயம் சிறப்பான தருணங்கள், இது எங்களின் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டமாக இருந்தது. புல்லாங்குழல் வாசிக்கும் நவீன், நான் உன்னுடன் வளர்ந்தேன்! உன்னுடன் ஒரே மேடையில் டிரம்ஸ் வாசித்திருக்கிறேன், என் வாழ்க்கையின் பல நிலைகளிலும் நீ வாசித்ததைக் கேட்டிருக்கின்றேன்! ஆனால் இந்த நிலை தான் நம் அனைவரின் மறக்க முடியாத சிறப்பான தருணம் ! நீங்கள் ஜாம்பவான்! நீ எனக்கு நண்பனாக இருப்பது எனக்கு பெருமை, இங்கு வந்ததற்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.
🎉Celebration 🫶🏻 #WikkiNayan pic.twitter.com/5gRe0NZnbZ
— Nayanthara✨ (@NayantharaU) June 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments