12 வருடத்திற்கு முன் சிம்பு.. இன்று அதே இடத்தில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
12 வருடங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு ஒன்றிற்காக சிம்புவுடன் வந்த அதே இடத்தில் தற்போது நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது வைரல் ஆகி வருகிறது.
சிம்பு, வரலட்சுமி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான முதல் படமான ’போடா போடி’ என்ற படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு நாங்கள் வந்தபோது 1000 ரூபாய் நுழைவு கட்டணம் இருந்தது என்று அந்த படத்தின் மலரும் நினைவுகளை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதே ஹாங்காங் டிஸ்னிலேண்ட் பகுதிக்கு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்திருப்பது இனிமையான தருணம் என்றும் மனம் திருப்தியாக உள்ளது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்களாக விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகு ஆகியோர் ஹாங்காங்கில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் கூட ஹாங்காங்கில் நயன்தாராவின் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெயரால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com