close
Choose your channels

நயன்தாரா எதுவும் சொல்லலையா? பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்த விக்னேஷ் சிவன்..!

Sunday, September 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு நயன்தாரா எதுவும் சொல்லவில்லையா? என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், இதில் பிரதீப் நாயகனாகவும் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதனை அடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது படத்தின் ஹீரோயினாக நடித்து வரும் கீர்த்தியை க்யூட்டாக வெளிநாட்டு சாலையில் நடந்து செல்வதை வீடியோ எடுத்து, பிறந்தநாள் வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. மேலும், "இவ்வளவு அழகாக நயன்தாராவை கூட வீடியோ எடுக்கவில்லை. நயன்தாரா இதற்கு எதுவும் சொல்லவில்லையா?" என்பது போன்ற கமெண்ட்களும் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment