நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள் என்றும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது தனக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம்? என்பது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.
ரசிகர் ஒருவரின் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ‘திருமணம் என்றால் அதிக செலவாகும், எனவே அதற்காக நாங்கள் தற்போது பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி கொரோனா பிரச்சினை தீர்ந்தவுடன் தான் திருமணம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
யாருக்கும் தெரியாத நயன்தாராவின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு ’இரவு டின்னர் முடிந்ததும் அவரே அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைப்பார்’ என்று கூறினார். நீங்கள் நயன்தாராவுக்கு கொடுத்த முதல் பரிசு என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் ’தங்கமே பாடல்’ என்றும் உங்களுக்குப் பிடித்த இடம் என்ன? என்று கேட்டபோது ’நயன்தாரா உடன் இருக்கும் எந்த இடமும் எனக்கு பிடிக்கும்’ என்றும் தெரிவித்தார்’ இயக்குனர் விக்னேஷ் சிவனின் இந்த பதில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments